Saturday, November 7, 2009

அந்தமானில் அவ்வை




அந்தமானில் அவ்வை நடராஜன்:

வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது திருக்குறள் மாநாடு நவம்பர் 7ம் தேதியன்று அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இனிதே நடந்தேறியது. அதன் பொருட்டு அவ்வை நரடராஜன் அவர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் இரவு உணவுக்கென ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றோம். படிகள் நிறைந்த அந்த விடுதிக்கு நுழைய தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள் கைத்தாங்கலாக அவ்வையை அழைத்துச் சென்றனர். அப்போது உணர்ச்சி மேலிட இலக்கிய மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் "அய்யா...தமிழ் உலகமே அவ்வையின் கைப்பிடித்து நடக்கிறது. ஆனால் இந்த அவ்வை எங்களைப் பிடித்து நடக்கிறது" என்றார். அதனை அவ்வையாரும் ரசித்து மகிழ்ந்தது மேலும் சிறப்பு.

5 comments:

  1. "புகைப்படம் இல்லாத ஒரு செய்தியா.." என்ன
    குறை கூறும்
    நெல்லை என்று செஞ்சயை உயர்த்தி கொள்ளும்
    ப. பழனி ராஜ்
    புது தில்லிலிருந்து

    ReplyDelete
  2. அன்பு பழனிராஜ்...

    பிறந்த குழந்தையால் உடனே நடக்க இயலுமா?
    முதலில் ஊர்ந்து, பின்னர் தவழ்ந்து பிறகுதான் நடக்கும். இப்போது தான் வலைப்பூ நட்டு வைத்துள்ளேன். புகைப்படப் பூக்களும் இனி மேல் பூக்கும். மணம் வீசும்.

    அந்தமான் தமிழ் நெஞ்சன்

    ReplyDelete
  3. என்ன பழனிராஜ்...

    இப்போது சந்தோஷம் தானே !!!

    ஏதோ உங்கள் புண்ணியத்தில் போட்டோ போடுவதை கற்றுக் கொண்டாகி விட்டது.

    கேள்வி கேட்பதினால் தானே அறிவு வளர்கிறது !!

    கேளுங்கள்.. அறிவை வளர்ப்போம்.

    அந்தமான் தமிழ் நெஞ்சன்

    ReplyDelete
  4. உலகெலாம் பரவி விரிந்து இருக்கும் எனதருமை தமிழன்பர்களுக்கு வணக்கம்,

    பிரதி வாரம் சனிக்கிழமைகள் தோறும் எங்களது இலக்கியமன்றத்தில் அந்தவாரத்திற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் தருகிற தலைப்புகளில் இலக்கிய அன்பர்கள் அவரவர்கள் கருத்துகளை எடுத்து வைத்திடுவர், இந்த வாரம் அதாவது வருகின்ற 28.11.2009 மாலை 5.30 மணிக்கு முனைவர் மா. அய்யாராஜு அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும் அவர்கள் தந்திருக்கும் தலைப்பு கவிஞர் வைரமுத்துவின் "வைர வரிகள்" இலக்கிய ஆர்வம் மிக்க உலகளாவிய தமிழர்கள் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதையில் உங்களுக்கு பிடித்த வைர வரிகளை இந்த வலையில் தெரிவித்தால் உங்கள் சார்பாக எங்களது இலக்கிய அவையிலே நான் படித்து காண்பித்து உங்களையும் அந்த அவையிலே இடம் பெறச் செய்கிற ஒரு வாய்ப்பினை நல்குவீர் . வாழ்க தமிழ் - வெல்க தமிழர் தமிழ்த் திருநாடு.

    ReplyDelete
  5. புல்லரிக்குங்கோ...
    உங்கள் பொறுப்பு
    உணர்வை கண்டு ...

    ReplyDelete