Tuesday, November 10, 2009

நன்றி மறவோம்

சமீபத்தில் நடந்த 9வது திருக்குறள் மாநாட்டை வெற்றியாக்கிய வி ஜி பி உலகத் தமிழ் சங்கம் மற்றும் இதர அறிஞர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாய் வாசித்தளித்த கவிதை.
(கவி ஆக்கம் : நகைச்சுவைக் கவிஞர் கார்மான்)

செவிக்குணவில்லாத
போழ்து-
வயிற்றுக்குக் கொடு.
சொன்னவர் வள்ளுவர்,
செய்பவர் சந்தோஷம்.

திங்கள் இரண்டாய்
தீவில் திருவிழா,
ஒன்பதாவது
திருக்குறள் மாநாடு.

இரண்டடி
முப்பால்
தந்தவர்க்கு
ஆறடியில்
அழகுச்சிலை
அளித்தவர்கள்-
விடியலும் ஜீவனும்
தந்த பிதாக்கள்!!!

தமிழகத்தில்
பருவ மழையால்
பெருவெள்ளம்.
விஜிபி உலகத்தமிழ்
சங்கத்தால்-
அந்தமானில்
தமிழ் வெள்ளம்.

அண்ணாச்சிகளின்
அன்புத்தமிழ்

குமரியின்
தமிழலை

அவ்வையின்
தமிழமுது

இராஜாதாசின்
இரத்தினத் தமிழ்

பேராசிரியர்களின்
மயக்கத்தமிழ்

உலகநாயகியின்
உன்மத்தத் தமிழ்

நெப்போலியனின்
நெத்தியடித் தமிழ்

இவையாவும்
பருகிப் பருகி
வாழ்வின் பயனை
எட்டி விட்டோம்.

வரும் நாட்களை
நீங்கள் வழங்கிய
தமிழோடு
வாழ்ந்து விடுவோம்.

தவணைமுறையின்
பிதாமகன்களே
இந்தத்தவணை
தமிழ்-
இப்போதைக்குப் போதும்.

அடுத்த தவணை
எப்போதைக்கு வரும்?

மூன்றாம் நாளாம்
இன்று...
செவிக்குணவில்லாததால்
வயிற்றுக்கு
அளிக்கிறீர்களோ?

இனி,
எதற்கு எதற்கெலாம்
நன்றி சொல்வோம்?

தமிழனும் தமிழும்
உள்ளவரை
உமை மறவோம்,
உமை மறவோம்!!!

நன்றியுடன்,
அந்தமான் தமிழர் சங்க இலக்கிய மன்ற அன்பர்கள்.
08-11-2009.

Monday, November 9, 2009

முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி

முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி

சமீபத்தில் வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் நடத்திய 9 வது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார். மிக குறுகிய அவகாசத்தில் இரவு உணவு இடைவெளியின் போது ப்ளாக் உருவாக்குவது பற்றி விரிவாய் தெளிவாய் அனைவருக்கும் எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். அவரின் உதவியினால் இன்று இந்த ப்ளாக் உங்களால் படிக்க முடிகிறது.

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் அனைவரின் சார்பிலும் எங்களின் இதயம் கனிந்த நன்றியினை முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, November 7, 2009

இலக்கிய மன்ற உறுப்பினர்கள்

அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள்:

தி.நா. கிருஷ்ணமூர்த்தி - தலைவர்
சேது மனோகரன் - துணைத் தலைவர்
சேது கபிலன் - செயலர்
சென்ன்பகராஜா - துணைச் செயலர்
கண்ணதாசன் - பொருளாளர்.

செயலாக்க உறுப்பினர்கள்:

அன்பு அழகர்சாமி
முனைவர் அய்யாராஜு
பாலகாந்தி
ஜெயராமன்

திருமதி கமலா தோதாத்ரி
திருமதி நாச்சா ரவி
திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி

அந்தமான் அருண்
அமெரிக்கா கார்த்திக் பாபு
கார்த்திகைநாதன்
மனோகரன்
பார்த்தசாரதி
இரதி முருகன்
கார்மான்
இராஜேந்திரன்
இராமகிருஷ்ணன்
செந்தில்
சூரியமூர்த்தி
காளையராஜன்

அந்தமானில் அவ்வை
அந்தமானில் அவ்வை நடராஜன்:

வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது திருக்குறள் மாநாடு நவம்பர் 7ம் தேதியன்று அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இனிதே நடந்தேறியது. அதன் பொருட்டு அவ்வை நரடராஜன் அவர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் இரவு உணவுக்கென ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றோம். படிகள் நிறைந்த அந்த விடுதிக்கு நுழைய தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர்கள் கைத்தாங்கலாக அவ்வையை அழைத்துச் சென்றனர். அப்போது உணர்ச்சி மேலிட இலக்கிய மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் "அய்யா...தமிழ் உலகமே அவ்வையின் கைப்பிடித்து நடக்கிறது. ஆனால் இந்த அவ்வை எங்களைப் பிடித்து நடக்கிறது" என்றார். அதனை அவ்வையாரும் ரசித்து மகிழ்ந்தது மேலும் சிறப்பு.